துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் காயம் – சந்தேகநபரிடம் விசாரணை, மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு - Global Tamil Voice உலக தமிழ் குரல்

துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் காயம் – சந்தேகநபரிடம் விசாரணை, மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

 


அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (4) அதிகாலை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களுக்கு அமைய, துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ஒன்று கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

About GTV